இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - இந்திய மகளிர் அணி வெற்றி

Home

shadow

                 இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் பங்கேற்று வருகிறது. 


இந்நிலையில் இந்தியா- இலங்கை மகளிர் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி காலேவில் நேற்று நடந்தது. 


டாஸ்ஜெயித்த முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 219 ரன்களில் ஆல்-அவுட்ஆனது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் தானியா பாத்யா 68 ரன்களும், கேப்டன் மிதாலி ராஜ் 52 ரன்களும், ஹேமலதா 35 ரன்களும் எடுத்தனர். 


முதல் ஆட்டத்தில் அரை சதம் அடித்த ஸ்மிருதி மந்தனா 14 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இலங்கை அணி தரப்பில் ஜெயன்கானி 3 விக்கெட்களையும், பிரபோத்ஹானி, வீரக்கொடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.. பின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சு காரணமாக 48 புள்ளி ஒரு ஓவர்களில் 212 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 


இதனால் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் போட்டி தொடரை கைப்பற்றியது. 


இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, வரும் 16-ந் தேதி நடைபெறவுள்ளது

இது தொடர்பான செய்திகள் :