ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற
இரு ஆட்டங்களில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன.
8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர்
பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை மொகாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ்
லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன்
அஸ்வின் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து,
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோகித் சர்மாவும்,
குயிண்டன் டி காக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். அணியின்
எண்ணிக்கை 51 ஆக இருக்கும்போது ரோகித் சர்மா 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய
சூர்யகுமார் யாதவ் 11 ரன்னில் வெளியேறினார்.
சிறப்பாக ஆடிய டி காக் 60 ரன்னில் ஆட்டமிழந்தார்.
.இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு
176 ரன்களை எடுத்தது. இதைத்தொடர்ந்து,
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெயிலும் இறங்கினர்.. அணியின் எண்ணிக்கை 53 ஆக இருந்தபோது கெயில்
40 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 18புள்ளி 4 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது.
இதேபோல் டெல்லியில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்
அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் கொல்கத்தாவை
பேட் செய்ய பணித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணி டெல்லியின் பந்து
வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. நிகில் நாய்க் ரன்னிலும் , கிறிஸ் லின் 20 ரன்னிலும் உத்தப்பா11 ரன்னிலும் நிதிஷ் ஆட்டமிழந்தனர் இதனால் கொல்கத்தா அணி 61 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்த நெருக்கடியான கட்டத்தில்
6-வது விக்கெட்டுக்கு
கேப்டன் தினேஷ் கார்த்திக்கும், ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல்லும் கூட்டணி அமைத்து அணியை சரிவில்
இருந்து மீட்டனர். இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு
185 ரன்கள் குவித்தது. பின்னர்
கலமிறங்கிய டெல்லி நிர்ணியக்கப்பட்ட 20 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்த்து . இதனால் ஆட்டம் சமன் அடைந்ததை தொடர்ந்து சூப்பர் ஓவர் முறையில்
முதலில் ஆடிய டெல்லி அணி ஒரு விக்கெட்டுக்கு 10 ரன் எடுத்தது. தொடர்ந்து
விளையாடிய கொல்கத்தா அணியால் சூப்பர் ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 7 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் டெல்லி அணி 3 ரன் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.