ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வென்றது

Home

shadow

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ்வென்ற  ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கம் முதலே ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக  பிரித்வி ஷாவு, ஷிகர் தவான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் 43 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். 20ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து  130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கலமிறங்கிய ஹைதராபாத் அணி 18 புள்ளி 3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை ஹைதராபாத் அணி பிடித்துள்ளது

இது தொடர்பான செய்திகள் :