கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் இளைஞர்கள், காவல்துறையினர் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Home

shadow

சுத்தமான, பசுமையான கன்னியாகுமரி என்ற கருத்தை மையமாக கொண்டு தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. 21 கிலோமீட்டர், 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டிகளில், கென்யா நாட்டைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள், உள்ளூர் இளைஞர்கள் மற்றும் காவல்துறையினர் என 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழக கூடுதல் காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு, சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியம் மற்றும் கடலோர காவல் படை, தமிழ்நாடு காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும்  சுத்தமான, பசுமையான கன்னியாகுமரி கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இன்று மாரத்தான் போட்டி நடைபெறுவதாகவும், இதில் பங்கேற்பது தங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதாகவும் போட்டியாளர்கள் தெரிவித்தனர். போட்டிகளில் சிறுவர் சிறுமிகள் ஆர்வத்துடன் பங்கேற்றது மாராத்தான் நடைபெற்ற வழி நெடுகிலும் இருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இது தொடர்பான செய்திகள் :