கொல்கத்தாக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது

Home

shadow

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற  .பி.எல் போட்டியின் 26 ஆவது ஆட்டத்தில் கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி  அபார வெற்றி பெற்றுள்ளது

12 ஆவது ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 26 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதிய ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பின்னர் கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக  கில்லும் ஜோ டென்லியும் களமிறங்கினர், ஆட்டத்தில்  இசாந்த் சர்மா வீசிய  முதல் பந்திலேயே டென்லி கோல்டன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஷுப்மன் கில்லின் 65 ரன்கள்  மற்றும் ரஸ்ஸல்லின் அதிரடியான 45 ரன்களாலும் கொல்கத்தாஅணி ஆட்ட நேரமுடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் மோரிஸ்,ரபடா, கீமோ பவுல் தலா 2 விக்கெடுகளை கைப்பற்றினர். பின்னர் 179 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆட தொடங்கிய டெல்லி தரப்பில் பிரித்வி ஷா, ஷிகர் தவான் களமிறங்கினர். ஷா 14 ரன்களிலும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களிலும் வெளியேறினர்ஒருமுனையில் தவான் அதிரடி தொடர்ந்த நிலையில்  அந்த அணியின் ரிஷாப் பண்ட் அவருடன் இணைந்து அதிரடியாக ஆடி  அந்த அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்இறுதியில் 18 புள்ளி 5 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 180 ரன்களை எடுத்து டெல்லி அணி வெற்றி பெற்றது

இது தொடர்பான செய்திகள் :