நெல்லையில் 3-ஆவது தமிழக பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் வரும் 11-ஆம் தேதி தொடக்கம்

Home

shadow

        நெல்லையில் 3-ஆவது தமிழக பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி வரும் 11-ஆம் தேதி தொடங்க உள்ளது.

சென்னை, சேப்பாக்கம், டி.என்.சி.ஏ அரங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் இந்திய வீரர்கள் சிவராம கிருஷ்ணன், சந்திர சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தமிழக பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இந்த ஆண்டு காரைக்குடி, மதுரை, துாத்துக்குடி, திருவள்ளூர் அணிகளின் பெயர்கள் மாற்றப்பட்டு, ஐ-ட்ரீம், காரைக்குடி காளை, சீசெம் மதுரை, பாந்தர்ஸ், ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ், வி.பி.காஞ்சி வீரன்ஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டு அணிகள் 32 போட்டிகளில் விளையாட உள்ளன. மேலும், ஒரு அணியில் 9 தமிழக விரர்கள், மற்றும் 2 வெளிமாநில வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். இறுதிப் போட்டி அடுத்த மாதம் 12-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :