புரோ கபடி போட்டியின் லீக் சுற்றில் ஹரியாணாவை வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி வெற்றி

Home

shadow

             புரோ கபடி போட்டியின் லீக் சுற்றில் 38 -க்கு 32 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியாணாவை வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது.

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. முதல் பாதியில் ஹரியாணா அணி 20 -க்கு 18 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜெய்ப்பூர் அணி சிறப்பாக ஆடியது. இறுதியில், ஹரியாணா அணியை 38 -க்கு 32 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது. 

இது தொடர்பான செய்திகள் :