புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் புனே அணியை 31-க்கு 22 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி

Home

shadow

          புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் புனே அணியை 31-க்கு 22 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது. இதில் புனே மற்றும் மும்பை அணிகள் மோதிக் கொண்டன. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மும்பை அணி சிறப்பாக விளையாடியது. இதனால் முதல் பாதியில் அந்த அணி 19 -க்கு 10 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் மும்பை அணி அபாரமாக ஆடியது. இறுதியில், புனே அணியை 31-க்கு 22 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இந்த சீசனில் மும்பை அணிக்கு கிடைத்த ஆறாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :