மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில், அரசு பள்ளி மாணவர்கள் முதல், இரண்டு இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளனர்

Home

shadow

 

சென்னை திருவேற்காடு அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில், அரசு பள்ளி மாணவர்கள் முதல், இரண்டு இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளனர்.

சென்னை திருவேற்காடு அருகே தனியார் பள்ளியில் தமிழ் தலைவாஸ் கபடி குழு சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைப்பெற்றது. 15 வயதுகுட்பட்டோருக்கான இந்தப் போட்டியில் சென்னை, தஞ்சாவூர், காஞ்சிபுரம் என தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இருந்து தலா ஒரு அணிகளைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவினருக்கும் தனித்தனியே 3 சுற்றுகளாக இப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஆண்கள் பிரிவில் தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு பள்ளி முதல் இடத்தையும், விழுப்புரம் அரசுப் பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. இதேபோல், பெண்கள் பிரிவில்  சென்னை நெசப்பாக்கம் அமிர்தா வித்யாலயா பள்ளி முதல் இடத்தையும், புதுச்சேரி பெரியார் அரசுப் பள்ளி இரண்டாம் இடத்தையும் வென்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கோப்பையும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன

இது தொடர்பான செய்திகள் :