17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான உரிமத்தை பெற்ற இந்தியா

Home

shadow

            அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான உரிமத்தை இந்தியா பெற்றுள்ளது.


17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை  சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடத்தி வருகிறது. அவ்வகையில் அடுத்த ஆண்டின் உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன. இது தொடர்பாக நேற்று மியாமியில் நடந்த பிபா கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், அடுத்த ஆண்டு 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை இந்தியாவிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டதுஇந்திய கால்பந்து சங்கம், 2020ல் 17 வயதுக்குப்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பையை நடத்த உள்ளதுஎன பிபா தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளது. வெளியிட்டது. இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பிரபுல் படேலும் இதனை உறுதி செய்தார். 2017ம் ஆண்டு 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை போட்டியை இந்தியா நடத்தியது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பான செய்திகள் :