அடுத்து வரும் போட்டிகளில் மேலும் பல பட்டங்களை வெல்லப்போவதாக, இந்திய குத்துச்சண்டை வீரரான விஜேந்திர சிங் சூளுரைத்துள்ளார்

Home

shadow

இந்திய தொழில் முறை குத்துச்சண்டை வீரரான விஜேந்திர சிங், நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற, தொழில் முறை குத்துச்சண்டை மோதலில், ஆப்ரிக்காவின் எர்னஸ்ட் அமுஜாவை வீழ்த்தி, டபிள்யூ பி ஓ ஓரியன்டல் மற்றும் ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் ஆகிய பட்டங்களை தக்கவைத்துக்கொண்டார். இதுவரை நடைபெற்ற தொழில் முறை குத்துச்சண்டை போட்டிகளில், தோல்வியே காணாத விஜேந்திர சிங்,தொடர்ச்சியாக கைப்பற்றிய 10வது வெற்றியாகும் இது. மோதலுக்குப் பின்னர் செய்தியாளாகளிடம் பேசிய விஜேந்திர சிங், ஆண்டின் இறுதியை வெற்றியுடன் நிறைவு செய்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். அடுத்து வரும் போட்டிகளில் மேலும் பல பட்டங்களை வெல்ல திட்டமிட்டுள்ளதாகவும் விஜேந்திர சிங் குறிப்பிட்டார்.

இது தொடர்பான செய்திகள் :