அபுதாபியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டி: 368 பதக்கங்களை வென்றது இந்தியா

Home

shadow

அபுதாபியில் நடைபெற்றுவந்த சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான  சிறப்பு கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்தியா 368 பதக்கங்களை வென்றுள்ளது.

அபுதாபியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுபோட்டிகள் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற வீரர்கள் பல்வேறு போட்டிகளில் 368 பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை குவித்துள்ளது. இந்தப் போட்டியில் அதிகபட்சமாக 20 தங்கம், 33 வெள்ளி, 43 வெண்கலப் பதக்கங்களை இந்தியர்கள் வென்றுள்ளனர். மேலும் ரோலர் ஸ்கேட்டிங்கில் விளையாட்டில்  13 தங்கம், 20 வெள்ளி, 16 வெண்கலமும், சைக்கிள் பந்தயத்தில் இந்தியா 11 தங்கம், 14 வெள்ளி, 20 வெண்கலம் உள்பட 45 பதக்கங்களை குவித்துள்ளது. இதனை தொடர்ந்த் தடகளத்தில் டிராக் அன்ட் ஃபீல்ட் பிரிவில் இந்தியா 5 தங்கம், 24 வெள்ளி, 10 வெண்கலம் உள்பட 39 பதக்கங்களை வென்றது.

இது தொடர்பான செய்திகள் :