அமெரிக்காவில் உள்ள ஹார்லம் க்ளோப்ட்ராட்டர்ஸ் என்ற கண்காட்சி கூடைப்பந்து அணியில் புதிதாக குள்ள மனிதர் ஒருவர் இணைந்துள்ளார்.

Home

shadow

அமெரிக்காவில் உள்ள ஹார்லம் க்ளோப்ட்ராட்டர்ஸ் என்ற கண்காட்சி கூடைப்பந்து அணியில் புதிதாக குள்ள மனிதர் ஒருவர் இணைந்துள்ளார். இவரின் வளையாட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

ஹார்லம் க்ளோப்-ட்ராட்டர்ஸ் எனும் கூடைப்பந்து அணி அமெரிக்காவில் மிகவும் பிரபலம். இவர்கள் விளையாட்டுடன் நகைச்சுவையைக் கலந்து விளையாடுவது மக்களை மிகவும் ஈர்த்துள்ளது. இந்த அணியில் தற்போது 32 வயதான ஜக்மணி ஸ்வான்சன் என்னும் குள்ளமனிதர் இணைந்துள்ளார். நியூயார்கில் பிறந்த இவரை “ஹாட் ஷாட்’ என மக்கள் அழைகின்றனர். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக உள்ளார். ஹார்லம் க்ளோப்-ட்ராட்டர்ஸ் அணியில் இவர் தான் மிகவும் குள்ளமான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஏழாவது வயதில் கூடைப்பந்து விளையாட ஆரம்பித்த ஸ்வான்சன் தன்னையும் மற்ற விளையாட்டு வீரர்கள் போல நடத்துவதையே விரும்புகிறார். இவருடைய தாயும் ஒரு குள்ள மனிதர். அவர் கொடுத்த ஊக்கமே தன்னை மேம்படுத்திக் கொள்ள உதவியது எனத் தெரிவிக்கிறார் ஸ்வான்சன். தனது மகனின் திறமைகளை பார்த்து, அவர் தாய் சப்ரினா மிகவும் பெருமைகொள்கிறார். 

இது தொடர்பான செய்திகள் :