அர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை

Home

shadow

                அர்ஜூனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது..

அர்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சாரியா விருது உள்ளிட்ட விருதுகளுக்கு விளையாட்டு வீரர்களை பரிந்துரைப்பதற்கான 12 பேர் அடங்கிய குழு டெல்லியில் கூடியது. இந்த கூட்ட முடிவில், அர்ஜுனா விருதுக்கு கிரிக்கெட் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, பூனம் யாதவ்  உட்பட 19 விளையாட்டு வீரர்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் பஜ்ரங் பூனியா, தீபா மாலிக் ஆகியோர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.  பாட்மிண்டன் வீரர் விமல் குமார், தடகள வீரர் மொஹிந்தர் சிங் தில்லான் உள்பட 3 பேர் துரோணாச்சாரியா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :