ஆசிய கைப்பந்து போட்டியில் ஈரான் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

Home

shadow

  ஈரானில் நடைபெற்று வரும் 18வயதிற்குட்பட்டோருக்கான 12வது ஆசிய கைப்பந்து போட்டியில் ஈரான் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஈரான் நாட்டின் டேப்ரிஸ் நகரில் நடைபெற்று வரும் 18 வயதிற்குட்பட்டோருக்கான 12வது ஆசிய கைப்பந்து போட்டியில் இந்தியா, ஈரான், ஆஸ்திரேலியா, தென்கொரியா, பாகிஸ்தான் உட்பட 18 அணிகள் பங்கேற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இந்தியாவும், ஈரானும் மோதின. இதில் ஈரான் 3க்கு பூஜ்யம் என்ற செட் கணக்கில் இந்தியா வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஈரான் இன்று நடைபெறவிருக்கும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா 5ஆம் இடத்தைக் கைப்பற்ற சீனாவுடன் இன்று மோதுகின்றது. 

இது தொடர்பான செய்திகள் :