ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டங்களில் ஈராக், சவூதி அணிகள் வெற்றி

Home

shadow

         ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டங்களில் ஈராக், சவூதி அணிகள் வெற்றி பெற்றன.

அபுதாபி நகரில் உள்ள சயீத் ஸ்போர்ட் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற ஈராக்வியட்நாம் இடையேயான ஆட்டத்தில், ஆட்டம் தொடங்கிய 24 நிமிடத்தில், வியட்நாம் வீரர் அதியா முதல் கோல் அடித்து தனது அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 35-வது நிமிடத்தில் ஈராக் வீரர் காதிம் கோல் அடித்தார். இதனை தொடர்ந்து 42-வது நிமிடத்தில் வியட்நாம் வீரர் கோல் அடிக்க 2-க்கு 1 என்ற முன்னிலை பெற்றது. ஆனால் ஆட்டத்தின் பிற்பாதியில் ஈராக் அணி வீரர்கள் அபாரமாக ஆடி, 60 மற்றும்90-வது நிமிடங்களில் கோல் அடித்தனர்., இதன் மூலம் 4-க்கு 2 என்ற கோல் கணக்கில் ஈராக் அணி வெற்றி பெற்றது. இதேபோல் இ பிரிவு ஆட்டத்தில் சவூதி அரேபியா மற்றும் வடகொரியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 28-வது நிமிடத்தில் சவூதி அரேபியா அணி முதல் கோல் அடித்து தனது கோல் கணக்கை தொடங்கி வைத்தது. மறுபுறம் வடகொரியா அணி வீரர்கள் சிறப்பாக விளையாடிய போது அவர்களால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. ஆனால் சவூதி வீரர்கள், வடகொரியாவின் தடுப்புகளை வெற்றிகரமாக தாண்டி கோல்களை குவித்தனர். இறுதியில் சவூதி அணி 4-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வடகொரியாவை வீழ்த்தியது.

இது தொடர்பான செய்திகள் :