ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா அணி தாய்லாந்தை 4 க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது

Home

shadow

                   ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா அணி தாய்லாந்தை  4 க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பல்வேறு நகரங்களில் 2019 ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 7 ஆண்டுகள் கழித்து ஆசியக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியாவும் - தாய்லாந்தும் மோதிய ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது. ஆட்டத்தின் 27-ஆவது நிமிடத்தில் இந்திய கேப்டன் சேத்ரி அடித்த பந்து தாய்லாந்து வீரர் தீரத்தோன் கையில் பட்டதால் பெனால்டி வாய்ப்பு தரப்பட்டது. இதை சரியாக பயன்படுத்தி கோலடித்தார் சேத்ரி. இதனையடுத்து  33-ஆவது நிமிடத்தில் தாய்லாந்து கேப்டன் தீரஸில் டங்டா அற்புதமாக கோலடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 1க்கு 1 என சமநிலை ஏற்பட்டது. இரண்டாம் பாதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. கேப்டன் சேத்ரி 46 வது நிமிடத்தில் உதாந்தாவிடம் இருந்து கிடைத்த பந்தை கோலாக மாற்றினார். இதன் தொடர்ச்சியாக 68 வது நிமிடத்தில் அனிருத் தாபாவும் மற்றும் 80ஆவது நிமிடத்தில் ஜிஜே லால்பெக்லுவாவும் அடித்தார். இதன் மூலம் தாய்லாந்தை 4 க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா. இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி 66 வது சர்வதேச கோலை அடித்ததின் மூலம் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் சாதனையை முறியடித்தார்

இது தொடர்பான செய்திகள் :