ஆந்திரா பெடரேஷன் கோப்பை கைப்பந்து

Home

shadow

ஆந்திர மாநிலத்தில் உள்ள பீமாவரத்தில், நடைபெற்று வரும் பெடரேஷன் கோப்பைக்கான 31-வது   தேசிய கைப்பந்து போட்டியின்துவக்க ஆட்டத்தில் தமிழக மகளிர் அணி, மஹாராஷ்டிர அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

ஆந்திர மாநிலம், வாராங்கல் மாவட்டத்தில் உள்ள பீமாவரத்தில், இந்திய கைப்பந்து சம்மேளனம் சார்பில், பெடரேஷன் கோப்பைக்கான 31ஆவது தேசிய கைப்பந்து நேற்று தொடங்கியது. ஆடவர் பிரிவில் கேரளா, இந்தியன் ரயில்வே, சர்வீசஸ், தமிழ்நாடு,ஆந்திரப்பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா, ஹரியாணா, இந்திய பல்கலைக்கழகம் ஆகிய அணிகளும், மகளிர் பிரிவில், இந்தியன்ரயில்வே, கேரளா, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் ஆகிய அணிகளும் பங்கேற்று வருகின்றன. நேற்று நடைபெற்றமுதல் லீக் ஆட்டத்தில் மகளிர் பிரிவில் தமிழக அணி, மஹாராஷ்டிரா அணியை 3க்கு பூஜ்யம் என்ற நேர் செட்டில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில், ஆடவர் பிரிவில் தமிழ்நாடு அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

இது தொடர்பான செய்திகள் :