இங்கிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் இந்தியா வென்ற்றி

Home

shadow

        இங்கிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 3-வது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி பிரிஸ்டலில் நேற்று நடைபெற்றது.  முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் ஐசன்ராய் 67, பட்லர் 34, ஹேங்ஸ் 30 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இதனை தொடர்ந்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.   2-வது ஓவரிலேயே ஷிகர் தவான் 5 ரன்களில் வெளியேற, அடுத்ததாக களமிறங்கிய லோகேஷ் ராகுல், ரோகித் சர்மாவுடன் இணைந்தார். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 4-வது ஓவரிலேயே 50 ரன்களை கடந்தது. சிறிது நேரத்தில் ராகுல் 19 ரன்களில் ஜேக் பால் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேற கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் கை கோர்த்தார். இருவரும் இணைந்து இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விரட்டியடித்தனர். விராட் கோலி 43 ரன்களுடன் ஜோர்டான் பந்து வீச்சில் அவுட் ஆனார்.  தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா, 56 பந்துகளில் சதம் அடித்தார். இறுதியாக இந்திய அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று   2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. 

இது தொடர்பான செய்திகள் :