இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி

Home

shadow

         இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில்  இந்திய பெண்கள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


இந்தியாஇங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டாமி பியான்ட் 29 ரன்னும், அமை ஜோன்ஸ் 26 ரன்னும், எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அனுஜா பட்டீல், ஹர்லீன் டியோல் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள். பின்னர் 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. சிறப்பாக விளையாடிய கேப்டன் மந்தனா 39 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 58 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. முன்னதாக நடந்த ஒரு நாள் போட்டி தொடரை இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் வென்று இருந்தது.

இது தொடர்பான செய்திகள் :