இண்டர்காண்டினெண்டல் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி தோல்வி

Home

shadow


நியூசிலாந்து அணிக்கு எதிரான இண்டர்காண்டினெண்டல் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கும் இண்டர்காண்டினெண்டல் கோப்பைக்கான போட்டிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் கென்யாவை 3-0 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 3வது லீக் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2வது பாதியின் 47-வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் சுனில் செத்ரி கோல் அடித்து இந்திய அணியை முன்னிலை பெற செய்தார். அதைதொடர்ந்து 49வது நிமிடத்தில் நியூசிலாந்து அணி ஒரு கோல் அடித்து அதனை சமன் செய்தது. போட்டியின் இறுதி நேரத்தில் நியூசிலாந்து அணி மேலும் ஒரு கோல் அடித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

இது தொடர்பான செய்திகள் :