இந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்

Home

shadow

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் அஜின்கியா ரகானே ஆகிய இருவரும் ஒருநாள் தொடரில்  சேர்க்கப்படாதது ஆச்சர்யம் அளிப்பதாக  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து  தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கங்குலி  தேர்வுக்குழுவினர் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் அதே வீரர்களை தேர்வு செய்யும் நேரம் வந்துவிட்டதாகவும் இதனால் வீரர்களுக்கு நம்பிக்கை உண்டாகும்  என்றார்மேலும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ள அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களில் பலர் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் ஆடக்கூடயவர்கள் என குறிப்பிட்ட அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரகானே, சுப்மான் கில் இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது என்றார்.

 

இது தொடர்பான செய்திகள் :