இந்திய அணி பாகிஸ்தானைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

Home

shadow


ஆசியக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய மகளிர் அணியின் சிறப்பான பந்துவீச்சால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 16 புள்ளி 1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் மந்தனா 38 ரன்களும். கெளர் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து நாளை நடைபெறவுள்ள இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது

இது தொடர்பான செய்திகள் :