இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜுக்கு,  ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகையையும் வீட்டுமனையையும் தெலுங்கானா அரசு வழங்கியது

Home

shadow

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. கோப்பையை வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டனர்.எனினும், இந்தத் தொடரில் மிகச்சிறப்பாக தனது விளையாட்டு திறனை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணி கிரிக்கெட் கேப்டன், மிதாலி ராஜிக்கு ஹைதராபாத்தில் வீட்டு மனையும், ஒரு கோடி ரூபாய் பரிசும் வழங்குவதாக தெலுங்கானா அரசு அறிவித்திருந்தது. அதன்படி இலவச வீட்டு மனைப் பட்டாவை அமைச்சர் பத்மாவதி, தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்நேற்று வழங்கினார். முன்னதாகஒரு கோடி ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இது தொடர்பான செய்திகள் :