இந்திய யு-20 அணி சாதனை

Home

shadow

       வலுவான ஆர்ஜென்டீனாவின் யு-20 அணியை வீழ்த்தி இந்திய யு-20 அணி அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது. வலுவான ஆர்ஜென்டீனாவின் யு-20 அணியை வீழ்த்தியுள்ளது இந்திய யு-20 அணி. ஸ்பெயினின் வேலன்சியாவில்  நடைபெற்று வரும் கோடிஃப் கோப்பைக்கான போட்டியில் ஆர்ஜென்டீனாவை எதிர்கொண்டது இந்திய யு-20 அணி. யு-20 உலகக் கோப்பையை 6 முறை வென்ற ஆர்ஜென்டீனா அணியை,   இந்திய அணி, 1 - 2  என்ற கோல் கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. 4-வது நிமிடத்தில் தீபக் டங்க்ரியும் 68-வது நிமிடத்தில் அன்வர் அலியும் கோலடித்து அசத்தினார்கள். 1984 முதல் நடைபெற்று வரும் கோடிஃப் கால்பந்துப் போட்டியில் 2016 முதல் தேசிய அளவிலான இளைஞர்கள் அணிகள் மட்டுமே பங்கேற்கின்றன.

இது தொடர்பான செய்திகள் :