இந்திய ரோல்பால் அணிகளுக்கு சிறப்பான வரவேற்பு

Home

shadow

இலங்கையில் நடைபெற்ற ரோல்பால் போட்டியில் வெற்றி பெற்று தாயகம் திரும்பிய இந்திய ரோல்பால் அணிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை, கொழும்புவில் 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான காட்சி ரோல்பால் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய ரோல்பால் சங்கத் துணைத் தலைவர் மனோஜ் தலைமையில் இந்திய அணி பங்கேற்றது. இந்தியா, இலங்கைக்கு இடையே நடைபெற்ற இப்போட்டியில், இந்தியாவின் 14 வயதுக்குட்பட்ட சிறுவர் அணியும், 17 வயதுக்குட்பட்ட சிறுமியர் அணியும் தங்கப்பதக்கத்தை வென்றன. 14 வயதுக்குட்பட்ட சிறுமியர் அணியும், 17 வயதுக்குட்பட்ட சிறுவர் அணியும் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளன. இதனைத் தொடர்ந்து வெற்றியுடன் தாயகம் திரும்பிய இந்திய ரோல்பால் அணிக்கு சென்னை விமான நிலையத்தில் நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறுவர், சிறுமிகளும், மூத்த வீரர்களும் சர்வதேச அளவிலான ரோல்பால் போட்டிகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் முதன்முதலாக இரு நாடுகளுக்கு இடையே இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் கென்யாவின் நைரோபியில் நடைபெற உள்ள ரோல்பால் உலகக் கோப்பை போட்டியை மனதில் வைத்து இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ள இந்திய ரோல்பால் பெடரேஷன், வரும் காலத்தில் சிறுவர், சிறுமியர் மற்றும் இளையோர் அணிகளுக்கு இதுபோன்று மேலும் பல போட்டிகளை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.       

இது தொடர்பான செய்திகள் :