இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது

Home

shadow

             இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது.


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், 3–வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் போட்டி மொகாலியில் இன்று பகல்இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. எஞ்சிய இரண்டு ஒரு நாள் போட்டிக்கு இந்திய மூத்த விக்கெட் கீப்பர் டோனிக்கு ஓய்வு வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பணியை இளம் வீரர் ரிஷாப் பான்ட் கவனிப்பார். 3–வது ஆட்டத்தின் போது பந்து காலில் தாக்கியதால் வலியால் அவதிப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமிக்கு முன் எச்சரிக்கையாக ஓய்வு அளிக்கப்பட்டு, புவனேஷ்குமார் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. ஆஸ்திரேலிய அணி முந்தைய ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் உற்சாகமடைந்துள்ளது. அதுவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்த அணி 300 ரன்களுக்கு மேல் குவித்து புது நம்பிக்கையை பெற்றுள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :