இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக ரத்து

Home

shadow


இந்தியாஇங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து அணியின் கேப்டன் விராட் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில் இந்தியாஇங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. முந்தைய போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சிக்கு பின்னர் இந்த போட்டிக்கு தயாராகி இருந்தனர். ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்தது. தொடர்ந்து மழைத்தூறல் இருந்து கொண்டே இருந்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கப்படவில்லை. இறுதியில் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இது தொடர்பான செய்திகள் :