இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடைபெற உள்ளது

Home

shadow

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான தொடரை  தீர்மானிக்கும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்று ஆடி வருகிறது. ஏற்கெனவே டி 20 தொடரை 2 க்கு 0 என ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதலிரண்டு ஆட்டங்களை வென்றது. மூன்றாவது மற்றும் நான்காவது ஆட்டங்களை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. மொஹாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 358 என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எடுத்தும், ஆஸ்திரேலிய அணியின் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அஷ்டன் டர்னர் ஆகியோரின் அற்புத ஆட்டத்தில் 359 ரன்களை குவித்து வென்றது. அதிரடி வீரர்கள் ஸ்மித், வார்னர் இல்லாத நிலையிலும், ஆஸ்திரேலிய. அணி மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் 5 ஆவது மற்றும் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? என்பதால் இரு அணி வீர்ர்களுக்கும் இது கடும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இது தொடர்பான செய்திகள் :