இந்தியா - ஆஸ்திரேலியா கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக தடைபட்டுயள்ளது

Home

shadow

                   இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக தடைபட்டுள்ளதால், போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. 322 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கிய நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2 வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. 31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா பாலோ-ஆன் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி நாளான இன்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உணவு இடைவேளை முடிந்து போட்டி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் மழை குறுக்கிடும் பட்சத்தில் போட்டி  டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டம் சமனில் முடியும் பட்சத்தில் 2 க்கு 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருப்பதால் தொடரை வெல்வது உறுதியாகிவிட்டது.

இது தொடர்பான செய்திகள் :