இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி வெற்றி

Home

shadow

             இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று தொடங்கிய 4-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து 3 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இந்திய வீரர்கள் இந்த போட்டியில் மிகவும் மோசமாக ஆடினர். ஒருவர் கூட 20 ரன்களை தாண்டவில்லை. அதிகபட்சமாக யுவேந்திர சாகல் 18 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக, 30 புள்ளி 5 ஓவர்கள் முடிவில் 92 ரன்கள் எடுத்த இந்திய அணி, அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. இதனை தொடர்ந்து 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணி வீரர்கள், 14 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் 93 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது தொடர்பான செய்திகள் :