இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி

Home

shadow

               இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி  2 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் சேர்த்துள்ளது


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, முதல் மூன்று டெஸ்ட்களில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றும் 2-க்கு 1 என முன்னிலையில் உள்ளது. சிட்னி நகரில் தொடங்கிய 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்திய வீரர்கள் அகர்வால், ஜடேஜா அரை சதம் கடந்தனர். புஜாரா மற்றும் ரிஷப் பந்த் 150 ரன்களுக்கு மேல் அடித்து இந்திய அணிக்கு வலுசேர்த்தனர். இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஹாரிஸ் மற்றும் ஹவாஜா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்கள் எதனையும் இழக்காமல், 24 ரன்களுடன் களத்தில் இருந்தது. இந்நிலையில் 3 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி சற்று முன் வரை 2 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் சேர்த்துள்ளது

இது தொடர்பான செய்திகள் :