இந்தியாவுடனான 4-ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

Home

shadow

இந்தியாவுடனான 4-ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-ஆவது ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்தது.  இதையடுத்து, 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியில் ஃபின்ச் ரன் ஏதும் எடுக்காமலும், மார்ஷ் 6 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதனால், அந்த அணி 12 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது.  இதையடுத்து கவாஜாவுடன் ஹேண்ட்ஸ்கோம்ப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியின் ரோஹித், தவான் பாட்னர்ஷிப்பை போல் நீண்ட நேரம் தாக்குப் பிடித்து விளையாடியது. இருவரும் அரைசதம் அடித்து நல்ல நிலையில் ரன் குவித்து வந்தனர். எனினும், வெற்றிக்கு தேவையான ரன் ரேட் ஓவருக்கு 8 என்ற நிலையிலேயே இருந்து வந்தது.  இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 192 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் கவாஜா 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹேண்ட்ஸ்கோம்ப் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்தார். அதன் பின்ன ஆஷ்டன் டர்னர் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். இதனால் இறுதியில் அந்த அணி 47 புள்ளி 5 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 359 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டர்னர் 43 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 

இது தொடர்பான செய்திகள் :