இந்தியா, பெல்ஜியம் அணிகள் விளையாடிய உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டம் சமனில் முடிவடைந்தது

Home

shadow

                         இந்தியா, பெல்ஜியம் அணிகள் விளையாடிய பரபரப்பான உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டம் சமனில் முடிவடைந்தது,

14-ஆவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவையும், பெல்ஜியம் முதல் ஆட்டத்தில் கனடாவையும் வென்றிருந்தன. இந்நிலையில் கலிங்கா மைதானத்தில் இரு அணிகளும் நேற்றிரவு மோதின. ஆட்டம் தொடங்கியது முதல், இரு அணிகளும் தாக்குதல் பாணியை கடைபிடித்தனர். ஹாக்கி பந்து பெல்ஜிய அணியின் கட்டுப்பாட்டில் பெரும்பாலும் இருந்த போதும், இந்தியாவின் தற்காப்பு அரணை தகா்க்க போராடினா். இந்நிலையில் பெல்ஜிய வீரா் அலெக்சாண்டா் ஹென்ட்ரிக்ஸ் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலை அடித்தார். இந்திய வீரா்கள் பதில் கோலடிக்க கடுமையாக முயற்சித்தும் முதல் பாதி ஆட்ட முடிவில் பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்தில் இந்தியா வீரர் வருண்குமாரின் சிறப்பான ஆட்டத்தின் பலனாக 35 ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்கபெற்று ஹா்மன்ப்ரீத் அற்புதமாக அதை கோலாக்கினார். இதன் மூலம் 1-1 என சமநிலை ஏற்பட்டது.  மீண்டும் 46-ஆவது நிமிடத்தில் கோல் அடித்தனர். இதன் மூலம் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.  ஆனால், இந்த மகிழ்ச்சி  நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பெல்ஜியம் அணி 56-ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தனர். இதனால் 2-2 என சமநிலை ஏற்பட்டு, கடைசி வரை பதில் கோலடிக்க இரு அணிகள் முயன்றும் முடியாததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

இது தொடர்பான செய்திகள் :