இன்று தொடங்கவுள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி - இந்தியா-செர்பியா அணிகள் மோதுகின்றன

Home

shadow

                    செர்பியாவில் இன்று தொடங்கவுள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-செர்பியா அணிகள் மோதுகின்றன.


செர்பியாவில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது


இன்று நடைபெறவுள்ள உலக குரூப் பிளே-ஆப் சுற்று ஆட்டத்தில் இந்தியா-செர்பியா அணிகள் மோதுகின்றன.  


இன்று நடைபெறும் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் இந்திய வீரர் ராம்குமார், செர்பியா வீரர் லாஸ்லோ ஜெரோவை சந்திக்கிறார். 


மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், செர்பியாவின் துசான் லாஜோவிக்குடன் மோதுகிறார். 


களிமண் தரையில் நடைபெறும் இந்த போட்டியில் நமது அணியில் யுகி பாம்ப்ரி இடம் பெறாததால் பெரிய பின்னடைவு எதுவும் இல்லை எனவும், ராம்குமார், பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் ஐரோப்பியாவில் களிமண் தரை ஆடுகளங்களில் பயிற்சி பெற்று வருவதால், அந்த அனுபவத்தை இந்த போட்டியில் அவர்கள் பயன்படுத்துவார்கள் எனவும் இந்திய அணியின் பயிற்சியாளர் ஜீஷன் அலி நம்பிக்கை தெரிவித்துள்ளர்

இது தொடர்பான செய்திகள் :