இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

Home

shadow

இலங்கை அணி அண்மையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது. இந்திய அணி டி20 தொடரை 3-0 என கைப்பற்றியதன் மூலம், தரவரிசையில் 4வது இடத்தில் இருந்த இந்திய அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளதுடி20 தரவரிசையில் பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது.

      இதற்கிடையே இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடாத விராட் கோலி முதல் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். ஆஸ்திரேலிய வீரர் பிஞ்ச் முதல் இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் வீரர் எவின் லெவிஸ் 2வது இடத்திலும் உள்ளனர். இருப்பினம கோலி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்திலேயே நீடிக்கிறார். டெஸ்ட் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் அரைசதம் அடித்த லோகேஷ் ராகுல் 23 இடங்கள் முன்னேறி 4வது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா 6 இடங்கள் முன்னேறி 14வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த பும்ரா, 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 2வது இடத்தில் உள்ளார்

இது தொடர்பான செய்திகள் :