இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று, 3-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது. 

Home

shadow

இரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று முன்னிலையில் இருந்த நிலையில், மும்பையில் மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய இலங்கை அணி வீரர்கள், அடுத்தடுத்து சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இந்திய வீரர்கள், நிதானமாக விளையாடினர். இதனால் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.  

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று, ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், ரோகித் சர்மா 10 சிக்சர்களுடன் சதம் அடித்தார். மூன்றாவது டி20 போட்டியில் ஒரு சிக்சர் அடித்திருந்தார். இதன்மூலம் 65 சிக்சர்களுடன், ஓரே ஆண்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :