இளையோர் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மானு பாகெர் தங்கம்

Home

shadow

 

இளையோர் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மானு பாகெர் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.


206 நாடுகள் பங்கேற்றுள்ள 3-வது இளையோர் ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த பளுதூக்குதல் போட்டியில் ஆண்களுக்கான 62 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் ஜெர்மி லால்ரினுங்கா மொத்தம் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.   இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.  துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய இளம் வீராங்கனை மானு பாகெர் 236 புள்ளி 5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.  இதன் மூலம் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :