இஸ்ரேல் செஸ் விளையாட்டு வீரர்களுக்கு விசா வழங்க மறுப்பு

Home

shadow

இஸ்ரேலில் உள்ள செஸ் ஆளுகைக்குழு, சவூதி அரேபியாவிடம் இழப்பீடு கேட்டுள்ளது. இந்த வருடத்தின் சர்வதேச செஸ் போட்டிகள் சவூதி அரேபியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இப்போட்டிகளில் கலந்து கொள்ள இஸ்ரேல் செஸ் விளையாட்டு வீரர்களுக்கு விசா வழங்க மறுத்துள்ளது சவூதி அரேபியா. இதனால் அந்தா வீரர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பொருட்செலவுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று இஸ்ரேல் செஸ் குழு தெரிவித்துள்ளது.

ராஜா சல்மான் உலக செஸ் சாம்பியன்ஷிப் பிளிட்ஸ் மற்றும் ரேபிட் இணைந்து நடத்தும் இந்த போட்டியில், சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில், டிசம்பர் 26 முதல் 30 வரை நடந்து கொண்டிருக்கும் நிலையில்,இஸ்ரேல் செஸ் வீரர்களுக்கு விசா அளிக்கப்படவில்லை. சர்வதேச அளவில் மிகச்சிறந்த சதுரங்க சாம்பியங்களை வரவழைக்கும் இந்த போட்டியில், இஸ்ரேல் நாட்டு பங்கேற்பாளர்கள் வர இயலாதது அந்நாட்டவர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. சவூதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் எந்த அரசியல் மற்றும் பொருளாதார சம்பந்தம் இல்லாத நிலையில்,இஸ்ரேலை ஒரு தனி நாடாக சவூதி அங்கீகரிக்கவில்லை என்பது இந்த  பிரச்சனையில் தெரிகின்றது.

சவூதி அரேபிய  தூதரக செய்தித்தொடர்பாளர் அமெரிக்க பாத்திமா பாகேன் கூறுகையில், சவூதி அரசாங்கம் எல்லா நாட்டு வீரர்களையும் அனுமதித்துள்ளது.ஆனால் சில கொள்கை ரீதியான முரண்பாடுகள் கொண்ட நாடுகளுக்கு விசா வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேல் சதுரங்க கூட்டமைப்பான FIDE,இதை பற்றி கூறுகையில், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க  சர்வதேச அளவில், நடக்கும் விளையாட்டு போட்டிகளில் இஸ்ரேலை பாகுபாடின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். முன்னதாக,இஸ்ரேல் ஈரான்,கத்தார்,ஆகிய நாடுகளுக்கும் விசா வழங்க சவூதி மறுத்த நிலையில்,ஈரானுக்கும்,கத்தார் மட்டும் விசா வழங்கப்பட்டு,இஸ்ரேல் விளையாட்டு வீரர்களுக்கு விசா வழங்கப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :