உலக அளவிலான கராத்தே போட்டி - சேலம் மாணவ, மாணவிகள் சாதனை

Home

shadow

                     உலக அளவிலான கராத்தே போட்டியில் சேலம் மாணவ, மாணவிகள் தங்கம், மற்றும் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளனர்.


மலோசியாவில் சர்வதேச கராத்தே போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் மலேசியா
, சீனா, இத்தாலி, ஜெர்மனி, இலங்கை, உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். 


இந்தியவின் சார்பாக சேலத்தில் இருந்து கலந்து கொண்ட 11 மாணவ, மாணவியர் 5 தங்கமும், 6 வெள்ளியும் வென்றனர்.   


பூஜாஸ்ரீ, அமிர்தவர்ஷினி, மீனாட்சி, விதர்சனா, பவன், ஆகியோர் தங்கமும், அம்ரிதா, லக்ஷன்யா, ஓபுகிருத்திகா, பிரியரஞ்சன், சவுமியாலக்சனா ஆகியோர் வெள்ளியும் வென்றனர்


பதக்கம் வென்ற மாணவ, மாணவியருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், கராத்தே கிரான் மாஸ்டர் குப்புராஜ், பயிற்சியாளர்கள் வீச்சு,  மணி, கோபால் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்

இது தொடர்பான செய்திகள் :