உலக கோப்பை கால்பந்து இந்திய சிறுவர்கள்

Home

shadow


 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், அதிகாரப்பூர்வமாக பந்து கொண்டு செல்லும் சிறுவர்களில், 2 இந்திய சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்தியாவின், கியா மோட்டார்ஸ் நிறுவனம், பிஃபாவின் அதிகாரப்பூர்வ பங்குதாரராக உலகக் கோப்பையில் இடம் பெற்றுள்ளது. கால்பந்து போட்டிகளில், சிறுவர்களே பந்துகளை கொண்டு சென்று வழங்குவது வழக்கம். இந்நிலையில் 10 முதல் 14 வயதுள்ள, ஆயிரத்து 600 இந்திய சிறுவர்கள் இதற்கான தகுதிச் சுற்றில் இடம் பெற்றனர். ஹரியானா மாநிலம், குர்கானில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்வுப் போட்டியில், இந்தியா முழுவதுமிருந்து வந்திருந்த சிறுவர்களில், இரண்டு பேரை இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தேர்வு செய்தார். கர்நாடகத்தைச் சேர்ந்த 10 வயது ரிஷி தேஜ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 11 வயது நத்தானியா ஜான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக ரஷ்யா செல்லும் இரண்டு சிறுவர்களும், பிரேசில் மற்றும் கோஸ்டாரிகா அணிகள் மோதும் போட்டி மற்றும் பனாமா மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதும் போட்டியின் போது, இந்திய சிறுவர்கள் பந்தை மைதானத்தில் கொண்டு சென்று கொடுக்க உள்ளனர். இதேபோன்று உலகம் முழுவதிலும் இருந்து 64 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

இது தொடர்பான செய்திகள் :