உலக துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்தியா மேலும் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது

Home

shadow

                        தென் கொரியாவில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா மேலும் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.


52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடைபெற்று வருகிறது. 


12-வது நாளான நேற்று நடந்த ஜூனியர் ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில், 16 வயதான இந்திய வீரர் உதய்வீர் சித்து 587 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்


25 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் அணிகள் பிரிவில் உதய்வீர் சித்து, விஜய்வீர் சித்து, ராஜ்கன்வார் சிங் சந்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி ஆயிரத்து 736 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றது.  


இந்த தொடரில் இதுவரை இந்தியா 9 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :