உலக துரித செஸ் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பட்டம் வென்றார்

Home

shadow

உலக துரித செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் பல முறை உலக சாம்பியன்ஷிப் பட்டங்கள் பெற்ற இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மோதினர். இந்த போட்டியின் 9 ஆவது சுற்றில் ஆனந்த் ,மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். 15 சுற்றுகளின் முடிவில் ஆனந்த் 10.5 புள்ளிகள் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றார். இறுதிச்சுற்றில் 10.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்த ரஷ்யாவின் விளாடிமிர் ஃபெடோசீவை டைபிரேக்கர் முறையில் வென்று ஆனந்த் முதலிடம் பெற்றார்.   இந்தியாவின்  ஹரிகிருஷ்ணா 16ஆவது இடத்தையும் சூர்ய சேகர் கங்குலி 60ஆவது இடத்தையும் பெற்றனர். விதித் குஜராத்தி, அதிபன், சேதுராமன் ஆகியோர் முறையே 61, 65 மற்றும் 96ஆவது இடங்களைப் பெற்றனர். 

இது தொடர்பான செய்திகள் :