உலக மகளிர் தினத்தையொட்டி ஜே.சி.ஐ மன்னை சார்பில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்

Home

shadow

               உலக மகளிர் தினத்தையொட்டி ஜே.சி. மன்னை சார்பில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்  ஓட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது.                                                  


மார்ச் மாதம் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஜே.சி. மன்னை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தேரடியில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை மன்னார்குடி துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலராஜவீதி, பந்தளடி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று மகளிர் தினத்தின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இது தொடர்பான செய்திகள் :