உலககோப்பை ஹாக்கி தொடரின் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை அர்ஜென்டினா அணி வீழ்த்தி வெற்றி

Home

shadow

 

ஒடிசாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரின் லீக் ஆட்டத்தில் 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை அர்ஜென்டினா அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.


14-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் சுற்று போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் கான்செலஸ் முதல் கோல் அடித்தார். இதனை தொடர்ந்து அர்ஜென்டினா வீரர் அகஸ்டின் மாசெல்லி பதில் கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார். இதேபோல், ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஜோசபின் ருமியு ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அர்ஜெண்டினா வீரர் அகஸ்டின் மாசெல்லி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனை தொடர்ந்து கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அர்ஜெண்டினா வீரர் கான்சலோ பெய்லாட் அதனை கோலாக்கி 3-க்கு 2 என தனது அணியை முன்னிலை பெற செய்தார். இரண்டாவது பாதியில், ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ரோயிஸ் ஒரு கோல் அடிக்க ஆட்டம் சமனிலை பெற்றது. கடைசியாக, ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் அர்ஜெண்டினார் வீரர் பெய்லாட் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றது.

இது தொடர்பான செய்திகள் :