உலககோப்பை ஹாக்கி தொடரில் நெதர்லாந்து அணியை 4 க்கு 1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வீழ்த்தி வெற்றி

Home

shadow

 

உலககோப்பை ஹாக்கி தொடரில் நெதர்லாந்து அணியை 4 க்கு 1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.


14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.


இதில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து அணிகள் நேற்று மோதின. இந்த ஆட்டத்தின் 13 வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி வீரர் மிர்கோ புருஜ்சர் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.  அதன்பின்னர் ஜெர்மனி அணி ஆட்டத்தை தனது கையில் எடுத்துக் கொண்டது. ஜெர்மனி வீரர் மதியாஸ் முல்லர் 30வது நிமிடத்திலும், இதனை தொடர்ந்து லூகாஸ் விண்ட்பெடர், மார்கோ மில்டாகு, கிறிஸ்டோபர் ரூர், தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். இறுதியில், நெதர்லாந்து அணியை 4 க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஜெர்மனி காலிறுதிக்கான வாய்ப்பை நெருங்கியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :