உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – வங்கதேச அணிகள் மோதல்

Home

shadow

            உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – வங்கதேச அணிகள் மோதல்

           உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் இங்கிலாந்து-வங்கதேசம், நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

 
          உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள 12ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணி, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.

         கார்டிப், ஷோபியா கார்டன்ஸ் நடைபெறவுள்ள இப்போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, மோர்டசா தலைமையிலான வங்கதேச அணியுடன் மோதுகிறது.

 
         பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வலுவான நிலையில் உள்ள இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் நோக்கத்துடன் வங்கதேச அணி களம் இறங்கவுள்ளது.

 
           இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

 
           டவுன்டானில் நடைபெறவுள்ள 13ஆவது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

 
          நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நியூசியலாந்து அணி இந்த தொடரில் கடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

 
          அனுபவம் இல்லாத வீரர்களுடன் களமிறங்கும் ஆப்கானிஸ்தான் அணி , நியூசிலாந்து அணியின் சவாலை எதிர்கொண்டு வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான்.

          இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு டிவுன்டானில் நடைபெறவுள்ள இப்போட்டியின்போது மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :