உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதல்

Home

shadow

            உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதல்

 

           உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள 8 ஆவது லீக் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

 

           சவுத்தாம்டனில், உள்ள தி ரோஸ் பவுல் கிரவுண்டில் நடைபெற்றவுள்ள இப்போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, பாப் டூ பிளஸிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது.

 

           பலம் வாய்ந்த இந்திய அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் களம் காண்கிறது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோரின் பந்து வீச்சு எதிர் அணியை திணறடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

           தென் ஆப்பிரிக்கா அணியில் டேல் ஸ்டெயின் தோள்பட்டை வலி காரணமாக விலகியுள்ளதால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :