உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை – நியுசிலாந்து அணிகள் மோதல்

Home

shadow

             உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்  இலங்கை – நியுசிலாந்து அணிகள் மோதல்

 

             உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை – நியுசிலாந்து அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை ஆஃப்கானிஸ்தான் எதிர்கொள்கிறது.

              12ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

 

             இன்று நடைபெறவுள்ள மூன்றாவது போட்டியில் கேன் வில்லியம்சன்ஸ் தலைமையிலான நியுசிலாந்து அணி திமுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியுடன் மோதுகிறது.இப்போட்டி வேல்ஸ் தலைநகர் கரிடிபில் உள்ள ஷோபியா மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

 

           மற்றொரு போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை, குல்பதீன் நைப் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.

 

          இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் ப்ரிஸ்டலில் உள்ள கவுண்டில் கிரவுண்டில் இப்போட்டி தொடங்குகிறது.

இது தொடர்பான செய்திகள் :