உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி

Home

shadow

         உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி

         உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

         உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 397 ரன்களை எடுத்தது.

         இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் 71 பந்துகளில் 148 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உலகக் கோப்பை தொடரில் அதிவேகமாக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இயான் மோர்கன் 4 ஆவது இடத்தில் உள்ளார். இவர் நேற்றைய போட்டியில் 57 பந்துகளில் சதம் அடித்தார்.

          ஆப்கானிஸ்தான் சுழல்பந்து வீச்சாளர் ரஷித் கான் 9 ஓவர்களில் 110 ரன்கள் விட்டுக் கொடுத்து மோசமான பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்தார்.

 
          இதன் பின்னர், 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 247 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 
          இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 வீக்கெட்களை வீழ்த்தினர்.

இது தொடர்பான செய்திகள் :